கார் மோதி முதியவர் பலி

கார் மோதி முதியவர் பலியானார்.

Update: 2022-04-05 19:39 GMT
கொள்ளிடம் டோல்கேட், ஏப்.6-
திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள ராஜகோபால் நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 64). இவர் கூத்தூர் அருகே உள்ள தனது தேங்காய் குடோனுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது அதே திசையில் திருச்சியிலிருந்து சமயபுரம் நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக பன்னீர்செல்வம் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்குஅவர் சிகிச்சை பலன் இன்றிஇறந்தார். இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள வைகைநல்லூர் பகுதியை சேர்ந்த  சுரேஷ்குமார் (47) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்