பெண்ணிடம் நகை பறிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண்ணிடம் நகையை பறித்து சென்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் ராமலட்சுமி (வயது 31). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வணிக வரி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் பணி முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், ராமலட்சுமியின் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை திடீரென பறித்து சென்றனர். இதுகுறித்து மல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.