மணப்பாறை அருகே இருதரப்பினர் இடையே மோதல்

மணப்பாறை அருகே இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-05 19:19 GMT
மணப்பாறை, ஏப்.6-
மணப்பாறை அருகே இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வீடு புகுந்து தாக்குதல்
மணப்பாறை அருகே உள்ள சீகம்பட்டியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கோவில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் வடக்கிப்பட்டியில் உள்ள மற்றொரு தரப்பினரை வீடுபுகுந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஒருபெண் உள்ளிட்ட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து மணப்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ஆத்திரமடைந்த வடக்கிப்பட்டி மக்கள் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி வடக்கிப்பட்டி அருகே மணப்பாறை - புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார்் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்