திருப்புவனம், கல்லல் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக திருப்புவனம், கல்லல் பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது
சிவகங்கை,
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக திருப்புவனம், கல்லல் பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணிகள்
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி, நெல்முடிக்கரை மற்றும் பொட்டபாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது. இதனால் இந்த துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட திருப்புவனம், புதூர், பழையூர், செல்லப்பநேந்தல், லாடனேந்தல், அல்லிநகரம், கீழராங்கியம், மேலராங்கியம், வயல்சேரி, கலியாந்தூர், மேலவெள்ளூர், கீழவெள்ளூர், மாங்குடி, அம்பலத்தாடி, மணலூர், அகரம், ஒத்தவீடு, மடப்புரம், பூவந்தி, வடகரை, பொட்டபாளையம், புலியூர், கொந்தகை, கீழடி, சொட்டதட்டி, சைனபுரம், கரிசல்குளம், காஞ்சிரங்குளம், முக்குடி, செங்குளம், திருப்பாசேத்தி, பழையனூர், மாரநாடு, ஆவரங்காடு, மேலச்சொரிக்குளம், வெள்ளிக்குறிச்சி, முதுவந்திடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
கல்லல் பகுதி
கல்லல் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கல்லல், செவரக்கோட்டை சாத்தரசம்பட்டி, வெற்றியூர், அரண்மனை சிறுவயல், செம்பனூர், பாகனேரி, கண்டிபட்டி, மற்றும் கண்டரமாணிக்கம் பிரிவில் பட்டமங்கலம், சொக்கநாதபுரம், ஆலங்குடி, கூத்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் வினியோகம் தடை செய்யப்படும்.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.