வாலாஜா அருகே பெண் திடீர் சாவு

வாலாஜா அருகே பெண் திடீரென உயிரிழந்தார்.

Update: 2022-04-05 18:13 GMT
வாலாஜா

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த வி.சி.மோட்டூர் ெகங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராம்குமார். அவரது மனைவி ஜோதி (வயது 33). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. 

இந்த நிலையில் சம்பவத்தன்று ஜோதி மலை வேப்பிலையை அரைத்து குடித்துள்ளார். பின்னர் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 
இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்