பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தேன்கனிக்கோட்டையில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தேன்கனிக்கோட்டையில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-05 18:12 GMT
தேன்கனிக்கோட்டை:
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தேன்கனிக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேகர் தலைமை தாங்கினார். மாணவர் மன்ற மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 
இதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாம்ராஜ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் சேகர், தளி ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர் சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அனுமப்பா, சந்திரசேகர், தாமரைச்செல்வி, தேவயானை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின்போது கம்யூனிஸ்டு கட்சியினர் மோட்டார் சைக்கிளில் கியாஸ் சிலிண்டரை வைத்தும், மாலை அணிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்