மத்தூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
மத்தூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மத்தூர்:
மத்தூர் அருகே உள்ள கவுண்டப்பனூரை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது21). இவர் திருப்பத்தூரில் இருந்து கஞ்சா கடத்தி விற்பனை செய்வதாக மத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த தமிழ்செல்வனை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.