அக்ரகாரம் ஊராட்சியில் 100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை

அக்ரகாரம் ஊராட்சியில் 100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

Update: 2022-04-05 17:26 GMT
ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியம் புதுப்பேட்டை அருகே உள்ள அக்ரகாரம் ஊராட்சியில் 100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சவிதா தேவன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார் கலந்துகொண்டு 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி பேசினார்.

இதில் அக்ராகரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்