முழுநேர ரேஷன்கடை கேட்டு பொதுமக்கள் மனு

சாஸ்திரி நகரில் முழுநேர ரேஷன்கடை கேட்டு பொதுமக்கள் மனு

Update: 2022-04-05 17:18 GMT
வேலூர்

வேலூர் கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் அலுவலகத்தில் சாய்நாதபுரம் அருகே உள்ள சாஸ்திரிநகரை சேர்ந்த பொதுமக்கள் அ.தி.மு.க. பிரமுகர் பி.எஸ்.பழனி தலைமையில் இன்று மனு அளித்தனர். 

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

வேலூர் சாஸ்திரிநகரில் பகுதிநேர ரேஷன் கடை இயங்கி வருகிறது. இதில் 700-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். 

இந்த கடை செவ்வாய் மற்றும் சனிக்கிழமை மட்டுமே திறக்கப்படுகிறது. இதனால் 2 நாட்களிலும் பொருட்கள் வாங்க ஏராளமானவர்கள் அங்கு குவிகின்றனர். 

எனவே நாங்கள் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருந்து பொருட்களை வாங்க வேண்டிய நிலை உள்ளது. பலர் கூலித் தொழிலாளர்களாக இருப்பதால் மாலை 6 மணிக்கு மேல் வந்து பொருட்களை வாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். 

பகுதி நேரமாக செயல்படும் இந்த கடையை அனைத்து நாட்களிலும் செயல்படும் வகையில் முழுநேர ரேஷன் கடையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்