திருப்பத்தூரில் மாற்றுதிறனாளிகள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருப்பத்தூரில் மாற்றுதிறனாளிகள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் திடீரென கலெக்டர் அலுவலகம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சாந்தலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் கூறுகையில் தகுதியற்றவர்களுக்கு முறைகேடாக மாற்றுத்திறாளிகள் சான்று வழங்கப்படுவதாகவும், அதிகாரிகள் தங்களை மதிப்பதில்லை, சிறப்பு முகாமில் குடிநீர் வசதி இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினர்.
தகவல் அறிந்த கலெக்டர் அமர்குஷ்வாஹா அவர்களை அழைத்து பேச்சுவாத்தை நடத்தினர். அப்போது மாற்றுதிறனாளிகள் முகாமில் கூடுதல் டாக்டர் நியமிக்கப்படுவர், 6 ஒன்றியங்களிலும் தனித்தனியாக சிறப்பு முகாம் நடத்தப்படும். மாவட்ட அளவிலான குழுவின் மூலம் கோரிக்கைகள் பெறப்பட்டு நடடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.