முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

ஆண்டிப்பட்டி பேரூராட்சி சக்கம்பட்டியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-04-05 16:09 GMT
ஆண்டிப்பட்டி: 

ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சக்கம்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. 

அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா தொடங்கியது. இதையொட்டி பெரியகுளம் ஆர்.டி.ஓ. ரிஷப் முன்னிலையில் கொடி மரத்தில் மாரியம்மன் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இத்திருவிழா வருகிற 16-ந்தேதி வரை  நடைபெறுகிறது. 

மேலும் செய்திகள்