சர்ச்சையில் சிக்கிய பெண் சாமியார் ஆசிரமம் அமைக்க பூமி பூஜை

கீழ்பென்னாத்தூர் அருகே சர்ச்சையில் சிக்கிய பெண் சாமியார் அன்னபூரணி ஆசிரமம் கட்டுவதற்கான பூமி பூஜை நடத்தினார்.

Update: 2022-04-05 16:04 GMT
கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் அருகே சர்ச்சையில் சிக்கிய பெண் சாமியார் அன்னபூரணி ஆசிரமம் கட்டுவதற்கான பூமி பூஜை நடத்தினார்.

சர்ச்சை சாமியார்

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த அன்னபூரணி என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னை ஆதிபராசக்தியின் மறு உருவம் என கூறியதால் சர்ச்சை ஏற்பட்டது. 

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே 3 கிலோ மீட்டர் தொலைவில் ராஜாதோப்பு கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ஏக்கர் நிலத்தை அன்னபூரணி வாங்கியதாக கூறப்படுகிறது. 

ஆசிரமம்

இங்கு ‘அன்னபூரணி அரசு அம்மா ஆசிரமம்' என்ற பெயரில் ஆசிரமம் கட்ட பூமிபூஜை நேற்று நடந்தது. 

இதில் கலந்து கொள்வதற்காக வெளியூரில் இருந்து ஆண், பெண் மற்றும் சிறுவர்கள் வேன்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர். தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கீற்றுக் கொட்டகையில் பூமி பூஜை நடந்தது. 

அப்போது ஆதிபராசக்தியின் மறுஉருவம் என தன்னை கூறிக்கொண்டு அன்னபூரணி அருள் வந்தது போன்று பக்தர்கள் மெய்சிலிர்க்கும் வகையில் ஆடினார். 

இதையடுத்து அந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் அழைத்து வரப்பட்டவர்கள் மலர்களை அவரது பாதத்தில் கொட்டி வணங்கி ஆசீர்வாதம் பெற்றுச்சென்றனர். 

மேலும் செய்திகள்