காரில் புகையிலை பொருட்கள் கடத்திய வியாபாரி கைது

எட்டயபுரம் அருகே காரில் புகையிலை பொருட்களை கடத்திய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-05 15:29 GMT
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே காரில் புகையிலை பொருட்களை கடத்திய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
வியாபாரி
எட்டயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் கான்சாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக ஒரு காரில் எட்டயபுரம் அருகே உள்ள ஈராச்சி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் மாரிமுத்து (வயது 37) என்ற வியாபாரி வந்தார். 
புகையிலை பொருள் கடத்தல்
அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்றது தெரிய வந்தது. அந்த காரில் இருந்த 15 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது 
இதுகுறித்து  எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்களை கடத்துவதற்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்து, அந்த பொருட்களை எங்கிருந்து வாங்கினார்? எங்கே கடத்தி சென்றார்? இதன் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்