புதுச்சேரியில் 4 நாட்கள் கடற்கடை திருவிழா - சுற்றுலாத்துறை மந்திரி அறிவிப்பு
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 4 நாட்கள் கடற்கரை திருவிழா நடைபெறும் என சுற்றுலாத்துறை மந்திரி லட்சுமிநாராயணன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி,
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வார இறுதி நாட்களில் அதிக அளவில் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக தமிழ் புத்தாண்டையொட்டி வருகிற 13-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை கடற்கரை திருவிழாவாக நடத்த திட்டமிட்டுள்ளதாக புதுச்சேரி சுற்றுலாத்துறை மந்திரி லட்சுமிநாராயணன் அறிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடற்கரை திருவிழா மூலம் சுற்றுலா பயணிகளை புதுச்சேரியில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள கடற்கரைக்கும் வரவழைக்க முடியும் என்று தெரிவித்தார். இந்த திருவிழாவின் 4 நாட்களிலும் பல்வேறு இசை, நடன நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் ஆகியவை நடைபெற உள்ளதாகவும் அவர் கூறினார்.