பந்தலூர்
கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் பந்தலூர் அருகே அத்திகுன்னா அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ராகவன், சதீஸ் ஆகியோர் 2-ம் இடம் பிடித்தனர்.
அவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் தலைமை ஆசிரியை மணியம்மாள், அறிவியல் ஆசிரியர் தேன்மொழி உள்பட ஆசிரியர்கள் கலந்துகொண்டு மாணவர்களை பாராட்டினர். மேலும் ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டது.