போக்சோ சட்டத்தில் கலெக்டர் அலுவலக ஊழியர் கைது
சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கலெக்டர் அலுவலக ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை
சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கலெக்டர் அலுவலக ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அரசு ஊழியர்
திருவண்ணாமலை தாலுகா மருத்துவாம்பாடி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). இவர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 3-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அவர் வீட்டில் இருந்து உள்ளார்.
அப்போது அவரது வீட்டின் வழியாக சென்ற 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியிடம் பேச்சு கொடுத்து, சிறுமியை வீட்டிற்குள் அழைத்து சென்று உள்ளார்.
திடீரென சிறுமியிடம் ரமேஷ் அத்துமீறலில் ஈடுபட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி அவரது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
போக்சோ சட்டத்தில் கைது
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் இன்று திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
அரசு ஊழியர் ைகது செய்யப்பட்ட சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.