சாலையில் நிறுத்தப்பட்ட வேன் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு
தென்காசியில் சாலையில் நிறுத்தப்பட்ட வேன் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி:
சங்கரன்கோவில் அருகே உள்ள வீரசிகாமணியை அடுத்த அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் வேல்ராஜ். நேற்று காலை இவருக்கு சொந்தமான வேனை, அவரது உறவினர் சுரேஷ் என்பவர் ஓட்டிக்கொண்டு தென்காசியில் ஒருவருக்கு ஸ்கேன் எடுப்பதற்காக சம்பா தெருவில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டருக்கு வந்தார். அங்கு வேனை நிறுத்திவிட்டு அதில் இருந்தவர்கள் இறங்கி ஆய்வகத்திற்குள் சென்றனர். சிறிது நேரத்தில் அந்த வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ், சிறப்பு நிலைய அலுவலர் கணேசன் மற்றும் வீரர்கள் அங்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.