தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், வள்ளி, தேவசேனா சமேத வில்லேந்திய வேலவர், உற்சவ மூர்த்தியான வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் ஆகிய தெய்வங்களுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, வில்வப்பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சரண கோஷங்கள் முழங்க பிரதட்சணம் நடைபெற்றது.