பஸ் நிலையத்தில் இறந்த முதியவரின் உடலை அடக்கம் செய்த போலீசார்

பஸ் நிலையத்தில் இறந்த முதியவரின் உடலை போலீசார் அ்டக்கம் செய்தனர்.

Update: 2022-04-04 21:29 GMT
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை பிள்ளை (வயது 70). திருமணம் செய்து கொள்ளாத இவர் கடந்த சில வருடங்களாக விக்கிரமங்கலம் கிழக்கு பஸ் நிலையத்தில் தங்கியிருந்தார். உடல்நலமின்றி இருந்த இவர் நேற்று காலை பஸ் நிலையத்தில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து பார்வையிட்ட விக்கிரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம், இது குறித்து ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அப்போது அவரது உறவினர்கள் உடலை பெற்றுச்செல்ல மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இது குறித்து விக்கிரமங்கலம் போலீசாருக்கு, கிராம நிர்வாக அலுவலர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார், பிச்சை பிள்ளையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகளை போலீசாரே செய்து, ஜெயங்கொண்டம் கலைக்கல்லூரி அருகே உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

மேலும் செய்திகள்