சிறுமியை காதலிக்க வற்புறுத்தியவர் போக்சோவில் கைது
சிறுமியை காதலிக்க வற்புறுத்தியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நூத்தப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 19). இவர், 12 வயது சிறுமியிடம் பலமுறை காதலிக்க வற்புறுத்தி செல்போன் எண் கேட்டதாக தெரிகிறது. இது குறித்து சிறுமியின் உறவினர் கை.களத்தூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.