செல்போன் திருடியவர் கைது

செல்போன் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-04 21:28 GMT
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் கிராமத்தில் சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவையை சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த பணிகளை செய்து வருகிறது. இந்த பணியில் அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியை சேர்ந்த மகேஸ்வரனும்(வயது 38) ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள ரெங்கராஜ் என்பவரது வீட்டில் வைத்திருந்த செல்போனை மகேஸ்வரன் திருடிச்சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து ரெங்கராஜ் கொடுத்த புகாரின்பேரில் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்