கார் மோதி வாலிபர் சாவு
நெல்லை அருகே கார் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
பாளையங்கோட்டை சுந்தரமூர்த்தி நாயனார் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (30). கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் நெல்லை அருகே உள்ள வி.எம்.சத்திரம் போலீஸ் சோதனைச் சாவடி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் வந்த கார், எதிர்பாராதவிதமாக சுப்பிரமணி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சுப்பிரமணிைய அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.