சாலை சீரமைக்கப்படுமா?
பார்வதிபுரத்திலிருந்து ஆசாரிபள்ளம்செல்லும் சாலை சென்ற சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால்சேதமடைந்து குண்டும்,குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலைகளில் போக்குவரத்து தடைபட்டு பொதுமக்கள், மாணவர்கள,் என அனைத்து தரப்பினரும் அவதியடைகின்றனர் . எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள நடவடிக்கை எடுக் வேண்டும்.
-குமாரசுவாமி பிள்ளை, பள்ளவிளை
குண்டும், குழியுமான சாலை
மெதுகும்மல் ஊராட்சிக்கு உட்பட்ட கோனசேரியில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே பொது மக்கள் நலன்கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விக்னராஜன், கோனசேரி.
பஸ் முறையாக இயக்கப்படுமா?
மார்த்தாண்டம் -குலசேகரம் வழித்தடத்தில் ஓரிரு மணி நேரம் பஸ்கள் இயங்காமல் இருப்பதும் பின்பு நான்கு, ஐந்து பஸ்கள் தொடர்ந்து வருவதும் தொடர்கதையாக உள்ளது.இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ்கள் குறிப்பிட்ட நேர இடைவெளியில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சீமான், குலசேகரம்.
மின்கம்பம் மாற்றப்படுமா?
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பால்பண்ணை சந்திப்பில் இருந்து கிறிஸ்துநகர் செல்லும் சாலையில் இடதுபுறம் ஒரு தனியார் ஸ்கேன் சென்டர் உள்ளது. இதன் அருகில் உள்ள மின்கம்பத்தின் மேல்பகுதி உடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, மின் கம்பத்தின் முறிந்த பகுதி கீழே விழுந்து உயிரிழப்பை ஏற்படுத்துவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-த.விசாகன், அனந்தபத்மனாபபுரம்.
சாலையை சீரமைக்க வேண்டும்
வடசேரி சந்திப்பில் இருந்து புத்தேரி வரை செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால்அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முரளிராவ், கலுங்கடி.