ரெயில் முன்பாய்ந்து டிரைவர் தற்கொலை
ரெயில் முன்பாய்ந்து டிரைவர் தற்கொலை செய்துகொண்டாா்.
சேலம் மாவட்டம் சங்ககிரி ரெயில் நிலையம் யார்டு பகுதியில் ஆண் பிணம் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இறந்து கிடந்தவர், சங்ககிரி தெற்கான் வீதியை சேர்ந்த முருகேசன் (வயது 36) என்பதும், ரிக் வண்டி டிரைவரான இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்பத்தகராறு இருந்து வந்ததும், அதில் மனமுடைந்ததால் முருகேசன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முருகேசனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.