கலெக்டரிடம் பா.ஜனதா மனு
மீனாட்சி அம்மன் கோவிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்-கலெக்டரிடம் பா.ஜனதா மனு
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட பா.ஜனதா கட்சி தலைவர் டாக்டர் சரவணன் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நான்குமாசி வீதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் பெண்களுக்கு வளைகாப்பு, திருமண நிச்சயார்த்தம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு அனுமதிக்க வேண்டும். கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை தடை செய்ய வேண்டும். அங்குள்ள நடைபாதைகளில் பக்தர்கள் நடப்பதை உறுதி செய்ய வேண்டும். நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதுமான கழிப்பிட வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகிறார்கள். குடிநீர் தட்டுபாடும் உள்ளது. எனவே கோவிலில் இது போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.