ஸ்ரீவில்லிபுத்தூர் திருப்பாற்கடல் கண்மாய் ரூ.1 கோடியில் சீரமைப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் திருப்பாற்கடல் கண்மாய் ரூ.1 கோடியில் சீரமைக்கப்பட உள்ளது என நகரசபை தலைவர் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் திருப்பாற்கடல் கண்மாய் ரூ.1 கோடியில் சீரமைக்கப்பட உள்ளது என நகரசபை தலைவர் கூறினார்.
சுத்திகரிப்பு மையம்
ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைபெட்டியில் அமைக்கப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை நகரசபை தலைவர் தங்கம் ரவி கண்ணன் பார்வையிட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் என்.ஜி.ஓ. காலனியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூ. 8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள யோகா மையத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவரை, சேவுக பாண்டியனார் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் வாழ்த்தினர்.
படகு சவாரி
அப்போது நகரசபை தலைவர் தங்கம் ரவி கண்ணன் கூறியதாவது:-
ஸ்ரீவில்லிபுத்தூரில் நகராட்சி அருகே திருப்பாற்கடல் கண்மாய் உள்ளது. இங்கு உள்ள தண்ணீரை மின்மாற்றி மூலம் சுத்தமாக்கி அதில் படகு சவாரி விடுவதற்கும், பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதற்காக, குளத்தை சுற்றி நடைபாதை அமைக்கும் பணி மேற்கொள்வதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆய்வின் போது நகர்மன்ற துணைத் தலைவர் செல்வமணி, ஆணையாளர் மல்லிகா, அதிகாரிகள், கவுன்சிலர் மீரா தனலட்சுமி முருகன், அய்யாவு பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.