மனமுடைந்த லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
மனமுடைந்த லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்
கரூர் அருகே உள்ள அரங்கநாதன்பேட்டை திருமுக்கூடலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 45). லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி அம்பிகா (38) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கோவில் திருவிழாவிற்கு கடந்த 5 ஆண்டுகளாக ஊர் முக்கியஸ்தர்கள் செந்தில்குமாரிடம் வரி ஏதும் வாங்காமல் இருந்து வந்துள்ளனர். இதனால் மனவேதனையில் இருந்து வந்த செந்தில்குமார் மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து வாங்கல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காந்தி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.