அரக்கோணத்தில் கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது

அரக்கோணத்தில் கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-04 18:23 GMT
அரக்கோணம்

அரக்கோணம் பழனிபேட்டை டி.என்.நகர், சத்தியவாணி முத்துநகர், சோமசுந்தரம் நகர் ஆகிய பகுதிகளில் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோமசுந்தரம் நகரில் சந்தேகிக்கும் வகையில் சுற்றி கொண்டிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர் அதேப் பகுதியை சேர்ந்த இளங்கோவன் மகன் நிஷாந்த் (வயது 20) என்பதும், அவர் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

அதேபோன்று சத்தியவாணிமுத்து நகரிலும் அதே பகுதியை சேர்ந்த பாபு மகன் விஜய் (20) என்பவரும் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து நிஷாந்த், விஜய் ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து தலா 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்