ராணிப்பேட்டையில் கால்வாய் சீரமைப்பு பணியை கலெக்டர் ஆய்வு

ராணிப்பேட்டையில் கால்வாய் சீரமைப்பு பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2022-04-04 18:11 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை நகராட்சி, ஜாகிர் உசேன் தெரு அருகே உள்ள கால்வாய் பராமரிப்பின்றி உள்ளது. இதனை கடந்த சில தினங்களுக்கு முன் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கால்வாயை சீரமைக்க உத்தரவிட்டார். இந்த கால்வாய்க்கு அருகில், தனியார் நிறுவனத்தின் பீங்கான் பொருட்கள் குவிக்கப்பட்டு, கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. 

கால்வாயை சீரமைக்கும் பொருட்டு, உடைந்த பீங்கான் பொருட்களை அகற்றும் பணி, நேற்று நடைபெற்றது. இதனை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தனியார் நிறுவன அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்