சிறுமிக்கு பாலியல் தொல்லை; விவசாயி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் ஒன்றியம் திருவரங்கம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் (வயது 57) விவசாயி. இவர் தெருவில் விளையாடி கொண்டிருந்த 3½ வயது பெண் குழந்தையை தனது கரும்பு தோட்டத்திற்கு தூக்கிச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதை அந்த சிறுமியின் பாட்டி பார்த்து சத்தம்போட்டுள்ளார். இதையடுத்து கேசவன் சிறுமியின் பாட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கேசவனை கைது செய்தனர்.