மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

சங்கராபுரம் அருகே மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2022-04-04 17:51 GMT
மூங்கில்துறைப்பட்டு, 

சங்கராபுரம் அருகே புதுப்பட்டு ஊராட்சியில் புதிதாக சிமெண்டு சாலை அமைக்கும் பணி மற்றும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கராபுரம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் அசோக் குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிமெண்டு சாலை மற்றும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து புளியங்கொட்டையை சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் மணலூரில் மகளிர் மேம்பாட்டு கட்டிடம், மேல்சிறுவள்ளூரில் பகுதி நேர ரேஷன் கடை கட்டிடம், உலகலாப்பாடியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்தார். இதையடுத்து வடபொன்பரப்பி கிராமத்தில் சிறுபாலம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் ஒன்றியக்குழுதுணைத்தலைவர்கள் அஞ்சலை கோவிந்தராஜ், சென்னம்மாள் அண்ணாதுரை, மாவட்டகவுன்சிலர் அஸ்வினி செந்தில்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் விமலா பாண்டுரங்கன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சித்ராதாஸ், பிளோமினாள் இருதயராஜ், செல்வராஜ், சிவமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்