சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2022-04-04 17:51 GMT
பரமக்குடி, 
பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணியை பரமக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு திருமலை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்பு பேரணியானது நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. அப்போது மாணவர்கள் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை கையில் ஏந்தி கோஷமிட்டு சென்றனர். இதில் பார்த்திபனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பத்மபிரியா உள்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்