பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். நகர தலைவர் லலித் ஆண்டனி வரவேற்றார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் அக.கிருஷ்ணமூர்த்தி, நாஞ்சில் ஜேசு துரைராஜ், காசிலிங்கம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநில அமைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, மாவட்ட துணைத்தலைவர் சேகர், மாநில செயலாளர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் கேசவன், விவசாய அணி மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, சேவாதள முன்னாள் மாவட்ட தலைவர் நாகராஜ், ஊடக பிரிவு நிர்வாகி கமலக்கண்ணன், கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் வேடியப்பன், கவுன்சிலர் விநாயகம், வட்டார தலைவர்கள் கோபால கிருஷ்ணன், ஜேக்கப், நஞ்சுண்டன், மாது, தனஞ்செயன், ரவிசந்திரன், அயோத்தி, சித்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அத்துடன் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது. எனவே பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.