ஏரியூரில் நாளை திம்மராய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
ஏரியூரில் நாளை திம்மராய பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.
ஏரியூர்:
ஏரியூரில் உள்ள திம்மராய பெருமாள் கோவில் சுஞ்சல்நத்தம், பட்டக்காரன் புதூர், ஈச்சப்பாடி, பெல்லூர், அச்சம்பட்டி உள்ளிட்ட 12 கிராம மக்களுக்கு சொந்தமானது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு நேற்று நாகமரை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இன்று யாக பூஜைகள் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து நாளை காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத திம்மராய சாமி கோவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.