இருதரப்பினரிடையே மோதல் 4 பேர் கைது
காரிமங்கலம் அருகே இருதரப்பினரிடையே மோதல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரிமங்கலம்:
காரிமங்கலம் ஒன்றியம் அனுமந்தபுரம் ஊராட்சியை சேர்ந்த ராஜேஷ், வேலன் ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மோதல் ஏற்பட்டது. அப்போது வேலன் அந்த பகுதியில் உள்ள சின்னசாமி என்பவரது டீக்கடையில் உள்ளே சென்று மறைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் தரப்பினர் டீ கடையை அடித்து உடைத்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். இது குறித்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கர், ராஜேஷ், பூவரசன், கவுரப்பன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தப்பியோடிய முரளி என்பவரை தேடி வருகின்றனர்.