ஆசிரியரிடம் தங்க சங்கிலி பறிப்பு

ஆசிரியரிடம் தங்க சங்கிலி பறிப்பு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-04-04 16:42 GMT
ராமநாதபுரம், 
மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் அய்யாத்துரை என்பவரின் மகன் பாண்டி (வயது44). இவர் ராமநாதபுரம் தனியார் பள்ளி ஒன்றில் விலங்கியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி முடிந்து ஊர் செல்வதற்காக ராமநாதபுரம் புதிய பஸ்நிலையம் வந்துள்ளார். கூட்ட நெரிசலில் பஸ் வந்ததும் பஸ்சில் ஏற முயன்றபோது தனது கழுத்தில் கிடந்த 2¾ பவுன் தங்க சங்கிலியை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ தங்க சங்கிலியை பறித்து சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து பாண்டி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்