தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உறுதிமொழி ஏற்பு
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ‘நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை’ என்ற திட்டம் குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ஆண்டிப்பட்டி:
அரசு மருத்துவமனைகளை சுத்தமாக பராமரிக்கும் வகையில் தமிழக அரசு ‘நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை’ என்ற திட்டத்தினை அமல்படுத்தி உள்ளது. இதையடுத்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ‘நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை திட்டம்’ செயல்படுத்தப்பட்டது. அதன்படி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் தலைமையில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், மாணவ-மாணவிகள் ஆகியோர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அவர்கள் மருத்துவமனையை சுத்தமாக பராமரிப்பதன் மூலம் தொற்று நோய் பரவலை தடுப்போம், மரியாதைக்குரிய இடம் கோவில் மட்டுமல்ல, நம் மருத்துவமனையும் தான், அதனை 24 மணிநேரமும் தூய்மையாக பராமரிப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.