நாகை கோர்ட்டில் பெற்றோர் சாட்சியம்

கல்லூரி மாணவி தற்ெ்காலை தொடர்பாக நாகை கோர்ட்டில் பெற்றோர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

Update: 2022-04-04 14:47 GMT
வெளிப்பாளையம்:
கல்லூரி மாணவி தற்ெ்காலை தொடர்பாக நாகை கோர்ட்டில் பெற்றோர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். 
கல்லூரி மாணவி தற்கொலை 
நாகை மாவட்டம் நாகூர் அமிர்தா நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி சித்ரா. இவர்களது மகள் சுபாஷினி(வயது 19). இவர், நாகையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். 
கல்வி கட்டணம் கட்டாததால் கல்லூரி நிர்வாகம் அவமானப்படுத்தியதாக கூறி கடந்த 30-ந்தேதி தூக்குப்போட்டு சுபாஷினி தற்கொலை செய்து கொண்டார். 
தொடர் போராட்டம் 
இதுதொடர்பாக கல்லூரி தாளாளர், முதல்வர், வகுப்பாசிரியர் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 
3 பேரையும் கைது செய்ய வலியுறுத்தி மாணவியின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 6-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. 
கோர்ட்டில் பெற்றோர் சாட்சியம்
மாணவி தற்கொலை தொடர்பாக நாகை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் மாணவியின் பெற்றோர் சுப்பிரமணியன்-சித்ரா மற்றும் உறவினர்கள் 9 பேர் ஆஜராகி சாட்சியம் அளிக்க சம்மன் வழங்கப்பட்டது. 
இதையடுத்து நேற்று அனைவரும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதி(பொறுப்பு) சுரேஷ் கார்த்திக் முன்னிலையில் சாட்சியம் அளித்தனர்.
-----------

மேலும் செய்திகள்