கல்லூரி என்.சி.சி. மாணவர்களுக்கான எழுத்து தேர்வு
கல்லூரி என்.சி.சி. மாணவர்களுக்கான எழுத்து தேர்வை 700 பேர் எழுதினர்.
திருச்சி:
திருச்சி தேசிய மாணவர் படை குரூப் ஹெட்குவார்டர்ஸ் சார்பாக அனைத்து பட்டாலியன்களில் உள்ள கல்லூரி என்.சி.சி. மாணவர்களுக்கான `சி' சான்றிதழ் தேர்வு திருச்சியில் உள்ள புனித வளனார் கல்லூரியில் நடைபெற்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற செய்முறை தேர்வில் திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நேற்று சுத்தம் மற்றும் சுகாதாரம், பொது ராணுவ அறிவு, இந்தியா கலந்து கொண்ட போர்கள், உலகப்போர்கள் போன்ற தலைப்புகளில் எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் 700 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.