இளமாயி அம்மன் கோவிலில் பாலாலயம்
இளமாயி அம்மன் கோவிலில் பாலாலயம் நடந்தது.
சோமரசம்பேட்டை:
சோமரசம்பேட்டையில் உள்ள இளமாயி அம்மன் கோவிலில் விநாயகர், இளமாயி அம்மன், தன்னை வெட்டை கருப்பு, மதுரை வீரன், பட்டவன், சம்புவன் ஆகிய சுவாமிகளுக்கான சன்னதிகள் உள்ளது. தற்போது இந்த கோவில் புனரமைக்கப்பட்டு, விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. திருப்பணிகள் நடைபெற உள்ளதை முன்னிட்டு கோவிலில் யாகம் வளர்க்கப்பட்டு பாலாலயம் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.