தேர்த்திருவிழா ஊர்வலத்தில் போலீஸ் வாகனம் மீது கல்வீச்சு
தேர்த்திருவிழா ஊர்வலத்தில் போலீஸ் வாகனம் மீது கல்வீசப்பட்டதில் கண்ணாடி உடைந்தது.
தொட்டியம்:
தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா கடந்த 29-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. வாணப்பட்டறை மைதானத்தில் வாணவேடிக்கை நிகழ்ச்சிக்காக தேர் அங்கு சென்றபோது, ஒரு தரப்பினர் பூத்தட்டை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்தனர். அப்போது மர்மநபர்கள் ஊர்வலத்தில் கல்வீசியதுடன், பாதுகாப்புக்கு வந்த போலீஸ் வாகனங்கள் மீதும் கல்வீசினர்.
இதில் 2 போலீஸ் ஜீப், தனியார் வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் போலீசார், அங்கிருந்த கூட்டத்தை கலைத்தனா். பின்னர் பக்தர்களால் தேர் தூக்கிச்செல்லப்பட்டது.