ரெயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை

சங்ககிரியில் ரெயில் முன்பாய்ந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-03 20:51 GMT
சங்ககிரி:-
சங்ககிரியில் ரெயில் முன்பாய்ந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி
சங்ககிரி ஆனைக்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 35), கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை 9 மணியளவில் சங்ககிரி ரெயில் நிலையம் பகுதிக்கு வந்தார். 
அப்போது அந்த ரெயில் நிலையத்தின் வழியாக சேலத்தில் இருந்து கோவை செல்லும் ரெயில் வந்தது. இதை பார்த்த முருகேசன் ரெயில் செல்லும் தண்டவாளத்தை நோக்கி ஓடினார். 
ரெயில் முன் பாய்ந்தார்
பின்னர் அவர் ரெயில் வரும் போது, அதன் முன் குறுக்கே திடீரென பாய்ந்தார். இதில் அவர் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும், ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளி முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
 மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனம் உடைந்து முருகேசன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்