மணல் அள்ளி வந்த மாட்டுவண்டி பறிமுதல்
காரியாபட்டி அருகே மணல் அள்ளி வந்த மாட்டுவண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரியாபட்டி,
நரிக்குடி அருகே கட்டனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் உழுத்திமடை- புதையனேந்தல் செல்லும் சாலையில் அத்திகுளம் -மானூர் கால்வாய் கிருதுமால் நதி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தப்பகுதியில் செங்கமடை கிராமத்தை சேர்ந்த சதாசிவம் (வயது 62) என்பவர் மாட்டுவண்டியில் மணல் அள்ளி வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அனுமதியின்றி மணல் அள்ளிவந்தது தெரியவந்தது. இதையடுத்து மாட்டு வண்டி பறிமுதல் செய்த கட்டனூர் போலீசார் சதாசிவம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.