குற்றாலம் அருகே மலையில் காட்டுத் தீ

குற்றாலம் அருகே மலையில் காட்டுத்தீ எரிந்தது.

Update: 2022-04-03 19:49 GMT
தென்காசி:

குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் வழியில் உள்ள கல்குவாரி பகுதிக்கு மேல் நேற்று முன்தினம் இரவு திடீரென அங்கிருந்த மரங்களில் தீப்பிடித்து எரிந்தன. 

இதுகுறித்த தகவல் அறிந்ததும் தென்காசி தீயணைப்பு படை நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் சிறப்பு அலுவலர் கணேசன் மற்றும் தீயணைப்பு படையினர் ராஜ்குமார், ஆறுமுகம், சுந்தர், ஜெகதீஷ் குமார் ஆகியோர் அதிகாலை சுமார் 3 மணி வரை போராடி தீயை அணைத்தனர். இந்த காட்டுத்தீ விபத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்புள்ள மூலிகைச் செடிகள், சந்தன மரம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் கருகின.

மேலும் செய்திகள்