மாணவ-மாணவிகளுக்கு பரிசு

மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டன

Update: 2022-04-03 18:37 GMT
இளையான்குடி, 
இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் திருவள்ளூர் கிராமத்தில் நடைபெற்றது. கல்லூரியின் துணை முதல்வர் ஜஹாங்கீர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இளையான்குடி பேரூராட்சி தலைவர் செய்யது ஜமீமா கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். திருவள்ளூர் ஊராட்சி  தலைவர் சாந்தி கருப்பணன் முன்னிலை வகித்தார். பிளாஸ்டிக்கின் தீமைகள் பற்றி கிராம மக்களுக்கு எடுத்துரைத்தனர். இளையான்குடி பார்கவுன்சில் அட்வகேட் கல்யாணி துரை கலந்துகொண்டு பெண்களுக்கு உரிய பாதுகாப்பு சட்டங்கள் குறித்து கிராம மக்களிடையே விழிப்புணர்வை  எடுத்துரைத்தார். கல்லூரி மாணவ-மாணவிகள் கோவில், மசூதி, அரசு பள்ளிகள் போன்ற இடங்களில் சுகாதார பணிகளை மேற்கொண்டனர். சிலம்ப பயிற்சியாளர் காயத்திரி ஹரிணி மூலம் மாணவி களுக்கு சிலம்ப பயிற்சி அளிக்கப்பட்டது. வணிகவியல் துறை பேராசிரியர் இப்ராகிம் மற்றும் இஸ்மாயில் ஆகியோர் மாணவ- மாணவிகளுக்கு பணமில்லா பரிவர்த்தனை பற்றியும் எடுத்துரைத்து பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. தடுப்பூசி முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார். சாத்தணி ஊராட்சி மன்ற தலைவர் சிராஜூதீன், கல்வியியல் கல்லூரி இயக்குனர் சபினுல்லாகான் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அப்ரோஸ் வரவேற்றார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பீர்முகமது ஒருங்கிணைத்தார். நிறைவாக சேக் அப்துல்லா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்