மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்தியவர் கைது
ஓசூர் அருகே மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
ஓசூர்:
ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் ரோந்து சென்றனர். அப்போது பெங்களூருவில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஓசூர் நோக்கி வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர் 26 கிலோ குட்கா கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து வேலூர் திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்த கமல் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து குட்கா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.