கஞ்சா வைத்திருந்தவர் கைது
ஓசூர் அருகே கஞ்சா வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
ஓசூர்:
ஓசூர் அட்கோ போலீசார், வசந்த் நகர் மீன் மார்க்கெட் பக்கமாக ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்ற நபரை சோதனை செய்த போது அவர் 900 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் இவர் பைரமங்கலத்தை சேர்ந்த நரேன்பர்மன் (வயது 37) என தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.