மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

காவேரிப்பட்டணம் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.

Update: 2022-04-03 18:35 GMT
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே உள்ள குந்தாணிபாறை பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 77). தொழிலாளி. இவர் காவேரிப்பட்டணம் பன்னீர்செல்வம் தெருவில் சாலையோரம் இருந்த மரத்தில் இலைகளை பறித்து கொண்டிருந்தார். அப்போது அவர் மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த காளியப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்