சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது

சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-03 18:31 GMT
கீரனூர்:
பொன்னமராவதி அருகே கீழத்தானியம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் சென்னையில் உள்ள ஒரு பேக்கரி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தபோது, அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி 2 மாத கர்ப்பமாகினார். இதுகுறித்து சிறுமியின் தாயார் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் ஆறுமுகத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்