மீனவர் தீக்குளித்து தற்கொலை
கோடிமுனையில் மீனவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
குளச்சல்:
கோடிமுனையில் மீனவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
குளச்சல் அருகே உள்ள கோடிமுனையை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சதீஷ் (வயது31), திருமணமாகவில்லை. கடலில் மீன் பிடித்தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் உள்ள அனைவரும் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்றனர். அப்போது, வீட்டில் தனியாக இருந்த சதீஷ் தன்மீது மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சதீசை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ் நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-